நண்பரை கொன்று பூனைக்கு விருந்தளித்த நபர் – ரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ..!

கஜகஸ்தான் நாட்டில் உள்ள கரகண்டா பகுதியை சேர்ந்தவர் அர்மான் வயது 33.. இவர் தனது பக்கத்து வீட்டுக் காரரும், நண்பருமான டனியர் என்பவரை மது அருந்துவதற்காக வீட்டுக்கு அழைத்துள்ளார். மது அருந்தி கொண்டே இருக்கும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றியதும் கத்தியை எடுத்துவந்த அர்மான், தன்னுடைய நண்பரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளான்.

கொலை செய்து அடுத்த மூன்று நாட்களில் டனியரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தெருவில் சுற்றித் திரியும் பூனைகளுக்கு உணவாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டனியர் திடீரென காணாமல் போனதை கண்ட உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் அந்நாட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.