குடி போதையில் லாரி ஓட்டியதால் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்தது

நேற்று அதிகாலை 1 மணியளவில் மேடவாக்கத்திலிருந்து துறைமுகத்துக்கு டேங்கர் லாரி ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அடையாறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் மழைநீர்போல் ஓடியது.

அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் வழிந்தோடிய கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்தனர்.

இந்த விபத்து காரணமாக அடையாறு பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் என்பவர் லாரியை ஓட்டியுள்ளார். இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. போலீஸார் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஓட்டுனரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் லாரி ஓட்டுநர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநர் ராம்லாலை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.