தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய இளைஞர்..! யார் சாமி இவன்.

தென்காசி மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகாபிரபு. இவர் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்க்கு அடிமையாவானவர். ஆட்டோவில் சவாரி இல்லாத நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதும் புகைப்படங்களை அனுப்புவதை வேலையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நாம செத்துப்போனா எத்தனை பேர் நம் மீது அனுதாப படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று தயார் செய்து அதனை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டசில் வைத்துள்ளார்.

ஸ்டேட்டஸாக வைத்த அடுத்த நொடியே ஆட்டோ ஓட்டுனரின் கிளாஸ் மேட்ஸ் நண்பர்கள் அவரது செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு உனக்கு ரோசாப்பு மாலை வாங்கி வரனுமா ? இல்லை மல்லிப்பூ மாலை வேணுமா ? என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

சும்மா டைம்பாஸுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்ததாகவும் அதில் ஒரு என் ஜாய் மெண்ட் இருப்பதாகவும் அந்த வாட்ஸ் ஆப் அடிமை மகாபிரபு தெரிவித்துள்ளார்.