வினோத் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் அஜித்

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தல 61’ படத்தை எச்.வினோத் தான் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அஜித்தின் புதிய படத்தை போனி கபூர் தயாரிக்க வாய்ப்பில்லை என சமீபத்திய செய்திகள் கூறுகின்றன.

tamil cinema news

அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம், விஸ்வாசம் படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தான் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் படத்தையும், ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தையும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது.