ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான ‘தலைவி’ படத்தின் விமர்சனம்
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘தலைவி’ தமிழ் உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் பள்ளிப் படிப்பு முதல் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்வது வரை அவர் கடந்து வந்த பாதைதான் படத்தின் கதை. ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் என்பதால் திரைக்கதையையும், வசனத்தையும் மிக கவனமாக கையாண்டுள்ளனர்.

சிறு வயதில் தந்தையை இழந்த ஜெயலலிதா நிதி நெருக்கடி காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திரைத்துறைக்குள் நுழைகிறார். பிறகு எம்.ஜி.ஆறுடன் நெருக்கமான நட்பு, அரசியல் நுழைவு, பல சூழ்ச்சிகளை வென்று முதல்வர் பதவியை அடைதல் இவை அனைத்தையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
எம்.ஜி.அராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக நாசரும் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். ஆர்.எம்.வீரப்பனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா 16 வயது ஒல்லியான உடல் தேகம், 40 வயதில் கொஞ்சம் பருமனான உடல் என கிட்டத்தட்ட ஜெயலலிதாவை நெருங்கி வந்திருக்கிறார்.

60 களில் திரைப்படத் துறை எவ்வாறு செயல்பட்டது, எம்ஜிஆர்-சிவாஜி போட்டி, கருணாநிதி-எம்ஜிஆர் நட்பு போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
சசிகலாவாக பூர்ணா நடித்திருக்கிறார். அரவிந்த் சுவாமி தொடங்கி, தம்பி ராமையா கதாபாத்திரம் வரை அனைவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்கிறது. படத்தின் இரண்டாம் பாதி ஜெயாவின் அரசியல் வளர்ச்சியை காட்டுகிறது.
டிவிட்டரில் @cinema_tamilxp என்ற பக்கத்தை Follow செய்யவும்.
