தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வரப்போகும் படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது கோலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

vijay in beast movie

இந்நிலையில் மேலும் ஒரு அப்டேட் கிடைத்திருக்கிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளனர்.

Advertisement

முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

100 பேர் வரை பங்குபெற்று சினிமா படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் நடிகர் விஜயும், பூஜா ஹெக்டேவும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.