போடுங்கடா வெடிய.. கவுண்ட் டவுன் போட்டு வெளியான அப்டேட் – தளபதி விஜய் பராக்!

தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் தற்பொழுது சத்தமாக சொல்லும் ஒரே விஷயம், போடுடா வெடிய.. என்பதைத்தான். தளபதி அவர்களின் 67வது திரைப்படமான லியோ திரைப்படம் வெகு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த நேரத்தில் தளபதியின் 68வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இந்த திரைப்படத்தை தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தளபதி விஜய் நடிக்கவுள்ளார். இது அர்ச்சனா கல்பாதி தயாரிக்கும் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பல முக்கிய ஜாம்பவான்கள் இந்த படத்தில் இடம்பெற உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தை பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்றும் அர்ச்சனா கூறியுள்ளார். அதே போல இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட டீவீட்டில் “கடவுள் உண்மையில் கருணை உள்ளம் கொண்டவர்”, என்னுடைய கனவு நிஜமானது, என்று கூறி இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்.
தளபதி விஜய் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார் யுவன்.