உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் 112 வயது நபர்

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் 1908-ம் ஆண்டு பிறந்த மார்க்வெஸ் என்கிற 112 வயது நபர் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த தகவலை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்கஸ் பேசியதாவது: என்னுடைய தந்தை எனக்கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் நல்ல ஒழுக்கத்தையும் எண்ணங்களையும் சொல்லி கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து வாழவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கர்த்தர் என்னுடன் இருக்கிறார். அதனால்தான் நான் இன்னும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

மார்க்கஸ் மூன்று ஆண்டுகள் மட்டுமே பள்ளியில் பயின்றுள்ளார். மார்க்கஸ் பெற்றோருக்கு மொத்தம் 11 குழந்தைகள். அதில் இரண்டாவது குழந்தைதான் மார்க்கஸ்.

Advertisement

ரோமானியாவைச் சேர்ந்த டுமிட்ரூ கோமானெஸ்கூ என்கிற 111 வயதான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். அதன் பிறகு இந்த சாதனையை மார்க்கஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.