காதலி போல வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன் :வசமாக சிக்கிய ஜோடி

செனிகல் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலிக்காக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத சென்ற போது வசமாக சிக்கியுள்ளார்.

செனிகல் நாட்டைச் சேர்ந்த காதீம் மோப்அப் என்ற 22 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணான கேங்க்யூய் டியோயம் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் கேஸ்டான் பெர்கர் என்ற பல்கலைகழகத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் கேங்க்யூய்க்கு பல்கலை தேர்வுகள்கள் வந்துள்ளது. ஆங்கில தேர்விற்கு தான் தயார் ஆகாதாதால் கட்டாயம் தோல்வி அடைந்து விடுவேன் என்று தனது காதலனுடன் பேசியுள்ளார். இதனால் கேங்க்யூய்க்கு பதிலாக காதீம் பெண் வேடத்தில் சென்று அவருக்கு பதிலாக குறிப்பிட்ட அந்த தேர்வை எழுத முடிவு செய்தார்.

Advertisement
today tamil news

சந்தேகமடைந்த தேர்வு கண்காணிப்பாளர் அவரை விசாரித்துள்ளார். அப்பொழுது தான் இவர் ஒரு பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்தது. பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் சதி திட்டம் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமானது.

ஆள்மாற்றாட்டம் செய்ததற்காக இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த பெண் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி அந்நாட்டு பல்கலைகழக தேர்வாணையம் தடை விதித்துள்ளது.