கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் பலி

வடக்கு ஈராக் மாவட்டம் ஜாகோவில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் சமையல்காரர் இஸா இஸ்மாயில் (வயது 25) உணவு தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பெரிய பானையில் கோழி சூப்பை தயாரித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்துள்ளார்.

பிறகு 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து இஸ்மாயீலின் தந்தை கூறுகையில் இஸ்மாயில் பல வருட அனுபவமுள்ள பயிற்சி பெற்ற சமையல்காரர். இஸ்மாயில் சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்த இடத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement