மாட்டுச்சாணத்தை சாப்பிட்ட மருத்துவர் : வைரலாகும் வீடியோ..

மருத்துவர் ஒருவர் பசுவின் சாணத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

மாட்டுச்சாணத்தை சாப்பிட்டால், நம் மனதும் உடலும் சுத்தமாகும்” என ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் மனோஜ் மிட்டல் என்பவர், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

MBBS பட்டதாரியான மனோஜ், கடந்த பல ஆண்டுகளாக மாட்டு மூத்திரம் மற்றும் சாணம் சாப்பிட்டு வந்துள்ளார். பசுவின் சாணத்தை சாப்பிடுவதால் கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாட்டு சாணம் சாப்பிட்டால் பல வியாதிகள் குணமாகும் என்றார்.

Advertisement