அன்னாசி பழத்தில் வெடிமருந்து – பரிதாபமாக உயிரிழந்த யானை

கேரளாவில் கர்ப்பம் தரித்திருந்த யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை சாப்பிடும் போது அன்னாசி பழத்தில் இருந்த வெடிமருந்து வெடித்து அந்த யானை பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளது.