இன்று முதல் காசி விஸ்வநாதர் ஆலயம் திறப்பு – மகிழ்ச்சியில் பக்தர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக காசிவிசுவநாதர் கோவில் பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் காசிவிசுவநாதர் கோவில் இன்று பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி காசி விசுவநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

சிவபெருமானுக்கு நீரால் மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.