ஒற்றை காலுடன் பள்ளிக்கு செல்லும் சிறுமி – உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்

பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சீமா மான்ஜியை தான் தற்போது இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

சீமாவின் தந்தை வேறு மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை பார்த்து வருகிறார். சீமாவின் தாயாரும் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்.

Advertisement

சீமாவுக்கு இரண்டு ஆண்டுகள் முன் விபத்தில் சிக்கியதில் ஒரு கால் இல்லாமல் போனது. தனது ஒரு காலை இழந்தாலும் இந்த சிறுமி நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கிமீ தூரம் ஒற்றை காலிலேயே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.

இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைராலகி வருகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்த வீடியோவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.