ஆளுநர் தமிழிசை வரும் வழியில் நின்றிருந்த மர்ம கார்!

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணையில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியூட்டி வருகிறது.
வரும் அக்டோபர் 31ஆம் தேதி பாஜக சார்பில் கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை வந்திருக்கிறார். அப்போது கோவை – அவிநாசி சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனே வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர். சோதனை செய்யப்பட்ட பிறகு அதில் வெடிகுண்டுகளோ, வெடிபொருட்களோ ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
வெடி குண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் கோவை அண்ணா சாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.