குழம்பில் மட்டன் இல்லாததால் மணமகன் செய்த அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு பகுதியில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகன் வீட்டாருக்கு , மணப்பெண் வீட்டார் விருந்து வைத்தனர். குழம்பில் மட்டன் இருக்கும் என எதிர்ப்பார்த்த மணமகன் வீட்டார் மட்டன் இல்லாததை கண்டு வருத்தம் அடைந்தனர்.

இதனையடுத்து மணப்பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். மணப்பெண் வீட்டார் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்க வில்லை. உடனே மணமகன் வீட்டார் வேறொரு இடத்திற்குச் சென்று அங்கு வேறொரு பெண்ணை மண முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

குழம்பில் மட்டன் இல்லை என்பதற்காக திருமணத்தை நிறுத்தி வேறொரு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement