தலைமுடியை சாப்பிட்ட மாணவி – ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன சோர்வு

கொரோனா ஊரடங்கால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே 15 வயது மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் தனது பாட்டியுடன் இருந்துள்ளார்.

தனிமையில் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருவதால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவிக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவர் மாணவியை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரின் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.

Advertisement

தலைமுடியை தொடர்ந்து சாப்பிட்டதால் இந்த உருவானதாக மருத்துவர் தெரிவித்தார். இந்நோய்க்கு மருத்துவத் துறை Rapunzel Syndrome என்று அழைக்கிறார்கள். பிறகு, சிறுமி, மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.