பல் இன்னும் வளரவில்லை..பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுவர்கள்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பிரதமர் மோடிக்கும் அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமான்தா பிஸ்வா சர்மா என்பவருக்கும் அந்த சிறுவர்கள் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனர்.

ஆர்யன் என்கிற 5 வயது சிறுவனும் ரிஸ்வா என்ற 6 வயது சிறுவனும் எழுதிய கடிதத்தில் தங்களுக்கான பால் பல் விழுந்துவிட்டது. அடுத்த பல் முளைக்கவில்லை அதனால் அவர்களால் அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிட முடியவில்லை என எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தை அவரது உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement