படுக்கையறையில் மறைந்திருந்த மர்மம்.. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் சிறிது நாட்களுக்கு முன் கலிபோர்னியாவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீடு 1951 ஆம் கட்டப்பட்டு வீடு.

அந்த வீட்டில் படுக்கறையின் பக்கத்தில் மூடி போட்டு ஒரு குழி மூடப்பட்டிருந்தது . ஏன் இங்கு மூடப்பட்டிருக்கிறது என்று எண்ணி, அந்த பெண் நண்பர் ஒருவர் மூலம் அந்த மூடியை திறந்துள்ளனர். திறந்து பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அந்த குழி வெளித்தோற்றத்தில் சாக்கடை குழி போல் தோற்றம் அளித்தது, அது சாக்கடையாக இருக்கும் என்று பார்த்தால் அது அக்காலத்தில் கட்டப்பட்ட பதுங்கு குழி என்பது தெரியவந்தது.

Advertisement

அந்த குழி எதற்காக கட்டப்பட்டது என்றால் அந்த காலகட்டத்தில் கலிபோர்னியாவில் அணுகுண்டு வெடிப்பில் இருந்து தப்புவதற்காக இப்படிப்பட்ட குழிகள் வீட்டிற்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அக்குழிக்குள் இரண்டு பேர் படுப்பதற்கான அறையும், சீறுநீர் கழிக்க தனிப்பட்ட வசதியும் உள்ளது. அந்த காலகட்டத்தில் உடல் எடை குறைப்பதற்கான கருவியும் அங்கு இருந்திருக்குறது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெனிபர் அதனை வீடியோவாக பதிவு செய்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஜெனிபர்க்கு பல ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

அதில் சிலர் இதனை சீரமைத்து பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் ஜெனிபர் கலிபோர்னியாவில் இந்த எங்கு உள்ளது என்று முகவரி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.