உலகின் முதல் எஸ்.எம்.எஸ் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் போனது

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த பிறகு அதில் எஸ்.எம்.எஸ் அதிகளவில் அனுப்பப்பட்டது. தற்போது வாட்ஸ்அப் போன்ற நவீன வசதிகள் வந்து விட்டதால் எஸ்.எம்.எஸ் அனுப்புவது குறைந்து விட்டது.

இந்நிலையில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் பாரிஸ் நகரில் ஏலம் விடப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வோடபோன் இன்ஜினியர் நீல் பாப்வொர்த் இங்கிலாந்தில் உள்ள தனது மேனேஜருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து என எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளார். இதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் ஆகும்.

இந்த எஸ்.எம்.எஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1,07,000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்) ஏலம் போனது.

Advertisement