குர்ர்ர்குர்ர்ர்.. குறட்டை விட்டு சிக்கிய காமெடி திருடன்..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் உள்ள வீடுகளில் மர்ம நபர் ஒருவர் பொருட்களை திருடி வந்திருக்கிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இதற்கிடையே, சங்கர் என்பரது வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மர்ம நபரை பொதுமக்கள் சிலர் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு, அவனை விசாரணை செய்ததில், அவன் பெயர் சதிஷ் என்பதும், இவ்வளவு நாட்களாக பொருட்களை திருடி வந்தவன் இவன் தான் என்பதும் தெரியவந்ததும்.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், நான் ஷங்கரின் வீட்டிற்கு திருட சென்றேன். ஆனால், அங்கு நகை, பணம் என எதுவும் இல்லை. இப்படியிருக்க, வீட்டில் மீன் குழம்பும், சாப்பாடும் இருந்ததால், அதனை எடுத்துக்கொண்டு வந்து மொட்டை மாடியில் வைத்து சாப்பிட்டுவிட்டு.

அங்கேயே தூங்கிவிட்டேன். விடிந்ததும், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பிக்க நினைத்தேன். ஆனால், குறட்டை விட்டதால், அந்த சத்தம் காரணமாக மாட்டிக்கொண்டேன் என்று கூறினார். இதையடுத்து, அந்த திருடனை கைது செய்த போலீஸ், சிறையில் அடைத்தனர்.