கெட்ட கனவு வருது : திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!

உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம் தாரூஹா நகரில் பாலாஜி கோவில் ஒன்று உள்ளது. மே 9-ம் தேதி காலையில் இக்கோவிலில் 5 கிலோ எடையுள்ள ஸ்ரீ ராமர் சிலை உட்பட பல லட்சம் மதிப்பிலான 16 சிலைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

பூசாரி மஹந்த் ராம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருடப்பட்ட சிலைகளுடன், திருடர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement

கோவில் பூசாரிக்கு திருடர்கள் அனுப்பிய கடிதத்தில், தங்களுக்கு கெட்ட கனவுகள் வருவதாகவும், தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

16 சிலைகள் காணாமல் போன நிலையில் 14 சிலைகள் மட்டுமே அந்த சாக்குப்பையில் இருந்தது. இரண்டு அஷ்ட உலோக சிலைகள் இன்னும் காணவில்லை என்பதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.