• Home
Thursday, July 10, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result

ADVERTISEMENT

நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
August 10, 2024
in ஆன்மிகம்
A A
நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -திருத்தங்கல்

மாவட்டம்– விருதுநகர்

இதையும் படிங்க

இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு

இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

March 9, 2025
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வரலாறு

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வரலாறு

March 9, 2025
செங்கண்மால் திருக்கோயில்

செங்கண்மால் திருக்கோயில்

November 28, 2024
வேங்கட வாணன் (நவதிருப்பதி 7) திருக்கோயில்

வேங்கட வாணன் (நவதிருப்பதி 7) திருக்கோயில்

November 28, 2024
ADVERTISEMENT

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -நின்ற நாராயணப் பெருமாள்

தாயார் -செங்கமலத்தாயார், (கமல மகாலட்சுமி, அன்ன நாயகி, ஆனந்தநாயகி ,அமிர்த நாயகி)

தீர்த்தம் -பாஸ்கர தீர்த்தம் ,பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி

திருவிழா -வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 30 மணி முதல் இரவு 8 மணி வரை

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 91 வது திவ்ய தேசம்

தல வரலாறு:

ஸ்ரீமன் நாராயணன் திருப்பாற்கடலில் சயணித்து இருந்தபோது அவரது அருகில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவரிடையே தங்களில் யார் சிறந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த ஸ்ரீதேவியின் தோழிகள் மற்ற தேவிர்களை காட்டிலும் ஸ்ரீதேவியே சிறந்தவள் என்றும் ,பெருமாள் மற்ற தேவர்களை விட இவளிடம் தான் பிரியம் அதிகம் உள்ளவர் என்பதாகவும் விவாதித்தனர். அதேபோல் பூமாதேவியின் தோழியரும் இந்த உலகிற்கு ஆதாரமாக விளங்குபவள் எங்கள் பூமி தேவியே ,அவள் மிகவும் சாந்தமானவள் எனவும் பொறுமை நிறைந்தவள் எனவும், இவளை காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார் என்றும் விவாதித்தனர்.

பின் நீளாதேவியின் தோழிகளும் அதன்படியே, எங்கள் நீலாதேவியே தண்ணீர் தேவதையாக இருக்கிறாள். தண்ணீரை “நாரம்”” என்பர் இதனால் தான் பெருமாளுக்கு “நாராயணன் ” என்ற சிறப்பு திருநாமமும் ஏற்பட்டது. தண்ணீரை பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்க செய்து தாங்குபவர் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள் என்றனர். விவாதம் வளர்ந்துகொண்டே போனது முடிந்தபாடில்லை. எனவே” ஸ்ரீதேவி, வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க தங்காலமலை என்னும் திருத்தங்கலுக்கு வந்து செங்கமல நாச்சியார் என்ற பெயரில் தவம் புரிந்தாள்.

இவரது தவத்திற்கு மெச்சி பெருமாள் காட்சி கொடுத்து இவளே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். திருமகள் தங்கியதால் இத்தலம் “திருத்தங்கல் “என்ற பெயர் பெற்றது . திருத்தங்கல் பெருமாள் கோயில் தங்காலமலை மீது அமைந்துள்ளது .மலை கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளது. மூலவரான நின்ற நாராயணப்பெருமாள் மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள் .இவளுக்கு ,கமல மகாலட்சுமி அன்ன நாயகி ,ஆனந்த நாயகி ,அமிர்த நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தாலும் ,திருமங்கையாழ்வார் 4 பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர் .மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். அவளது கனவில் அழகிய ராஜகுமாரனை கண்டால் ,தனது தோழியிடம் அவனது அழகை வர்ணித்து ஒரு ஓவியம் வரைய சொன்னாள். அந்த ஓவியம் வரைந்த பின் ஒரு அழகான வாலிப உருவம் வந்தது. கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது.

அவனையே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து ,துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிக்கொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வந்தாள். அணிருதன் விழித்துப் பார்த்து தன் அருகே ஒரு அழகி ஒருத்தி இருப்பதை கண்டான் நடந்தவை யாவையும் ஞானதிருஷ்டியால் உணர்ந்து உஷையை காந்தர்வ திருமணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயற்சித்த போது ஒரு அசரீரி தோன்றி தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய் என ஒலித்தது.

இதைக் கேட்ட வாணன் அநிருத்தனை சிறை வைத்தான் .உடனே கிருஷ்ணன் அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி திருத்தங்கலில் திருமணம் நடத்தி வைத்து நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார். சுவேதன் என்ற தீவில் ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் வந்தது எனவே இருவரும் பிரம்மனிடம் சென்று தீர்வு காண முற்பட்டனர்.

பிரம்மனும் ஆதிசேஷனை சிறந்தவன் என கூறி அதற்கான விளக்கத்தை எடுத்துரைத்தார் .ஆதிசேஷன் மேல் தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார், ஆனால் உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார் .எனவே ஆதிசேஷனை சிறந்தவன் என விளக்கமளித்தார் .வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கி தவம் இருந்தது.

பெருமாளும் தவத்திற்கு மகிழ்ந்து உனது விருப்பம் என்ன என கேட்டார் .அதற்கு ஆலமரம் தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொள்ள வேண்டும் என கேட்டது. அதற்கு பெருமாள் திருமகள் தவம் செய்யும் திருத்தங்களில் நீ மலை வடிவில் சென்று அமர்வதாக நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில் உன்மீது நின்றும் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் என்றார் மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம் தங்கும் ஆல மலை எனப்படும்.

கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன் இரு கரங்கள் வணங்கியவாறு ,பின் கரங்கள் அமிர்த கலசம் ,வாசுகி நாகத்துடனும் நின்றகோலத்தில் உள்ளது .தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று தன் கையில் ஏந்தி இருப்பது இத்தலத்தில் மட்டுமே. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால் அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.

இங்குள்ள தீர்த்தத்தில் ,சூரியனுக்க’ பிரம்மஹத்தி தோஷம் போக்கிய தாக ஐதிகம் உள்ளது .இத்தலத்தில் அமைந்துள்ள மலையிலேயே சிவன், முருகனுக்கும் கோயில்கள் உள்ளன. பெருமாளின் மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர்., அன்ன நாயகி அபூர்வநாயகி ,ஆனந்தநாயகி, ஜாம்பவதி. இவர்களில் ஜாம்பவதியை இத்தலத்தில்தான் திருமணம் செய்து கொண்டாராம் பெருமாள் .இங்கு தாயார் நின்ற கோலத்தில் மிக உயரமாக காட்சி தருகிறார் .பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 48வது தலம், பாண்டி நாட்டு திவ்ய தேசத்தில் 5வது தலம். தலம் குறித்து சிலப்பதிகாரத்தில் வாத்திகன் கதையில் செய்தி இருக்கிறது 1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் வைகானஸ ஆகமப்படி பூஜை நடக்கிறது.

ShareTweetSend

Related Posts

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்
ஆன்மிகம்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

July 2, 2025
அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!
ஆன்மிகம்

அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

July 2, 2025
நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.