சுவாரஸ்யம் கலந்த திட்டம் இரண்டு (Plan B) திரை விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தினேஷ் கண்ணன் & வினோத் குமார் தயாரிப்பில், விக்னேஷ் கார்த்திக் படத்தை இயக்கியுள்ளார். திட்டம் இரண்டு (Plan B) SonyLiv-ல் நேரடியாக வெளியாகியுள்ளது.

போலீஸாக வரும் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) பேருந்து பயணத்தில் ஒரு இளைஞனை சந்திக்கிறார். இருவரும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். தனது நெருங்கிய தோழியான அனன்யா திடீரென கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிப்பதற்க்காக களத்தில் இறங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் தோழிக்கு என்ன ஆனது? ஐஸ்வர்யா ராஜேஷின் காதல் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு படத்தின் க்ளைமாக்ஸில் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட்டை கொடுக்கின்றனர்.

போலீஸாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆடை படத்தில் நடித்த அனன்யா ராம் பிரசாத் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

பிளாஷ்பேக்கில் வரும் அழுத்தமான காட்சிகள், இரவு நேர காட்சிகள் என கோகுல் பெனோயின் ஒளிப்பதிவு அருமை. சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் கொடுக்கிறது.

சுவாரஸ்யமாக செல்லும் திரைக்கதையும் இறுதி வரை சஸ்பென்ஸை வைத்திருப்பதும் தான் படத்தின் பெரிய பலம். முற்றிலும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் இந்த சமூகத்தின் தற்போதைய கவனத்தை ஈர்க்கிறது.

திட்டம் இரண்டு (Plan B) – சுவாரஸ்யம்