கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை : அரசு அதிரடி

கொரோனா பரவலை பிறப்பதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனாவை தடுக்க முக்கியமான கருவியாகச் செயல்பட்டது தடுப்பூசி தான்.

இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இருப்பினும் சில தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் தமிழக அரசு அதற்கான சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே பொது வெளியே நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போடாதவர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

tamil news today

இந்த உத்தரவு அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குனர்கள் மற்றும் சென்னை மாநகர சுகாதார அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன் படி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் பொது வெளியில் நடமாட அனுமதிக்க கூடாது. குறிப்பாக மார்க்கெட்டுகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், உணவகம் போன்றவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த சட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிக்கு முழு உரிமை உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement