துணிவு திரை விமர்சனம்
எச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் துணிவு. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு பிரபல வங்கி ஒன்றில் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் வருகிறது. ஆனால் ஏற்கனவே அந்த பணத்தை கொள்ளையடிக்க அஜித் உள்ளே இருக்கிறார். அதன் பிறகு தரமான சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் கதை.
அஜித் தனது வழக்கமான நடிப்பில் இருந்து வெளியே வந்து, ருத்ர தாண்டவம் ஆடி உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் செம்ம ஸ்கோர் செய்கிறார். மஞ்சு வாரியருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
போலீஸ் கமிஷனராக சமுத்திரக்கனி மிடுக்கான தோற்றத்தில் மிரட்டுகிறார். படத்தின் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஏதோ ஒரு வகையில் வசனங்கள் மூலம் ஈர்க்கின்றனர்.
படத்தின் முதற்பாதி முழுவதும் விறுவிறுப்பிற்கு பஞ்சமே இருக்காது. அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சிகள். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை சிறப்பாக உள்ளது.
ஒரு வங்கி மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை துணிச்சலாக சொல்லி இருக்கிறார் எச் வினோத். மொத்தத்தில் வலிமை படத்தால் சோர்ந்து போன அஜித் ரசிகர்களுக்கு துணிவு படம் பொங்கல் விருந்தாக அமைத்துள்ளது.
