வாரிசு படத்தை ஓரங்கட்டிய துணிவு…தல ரசிகர்கள் செம ஹேப்பி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதே நேரத்தில் வசூலை வாரி குவித்தது.
வாரிசு படம் வெளியான அதே நாளில் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இந்த படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். படம் வெளியான முதல் நாளில் இருந்தே துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் மாஸ் காட்டியது.
Also Read : கடும் நஷ்டத்தை சந்தித்த வாரிசு…உண்மையை உடைத்த பிரபலம்..!
இந்நிலையில் அஜித்தின் துணிவு படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. 100வது நாள் போஸ்டர் ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#Thunivu | https://t.co/hW07uyesbS pic.twitter.com/qmOq3KPaRy
— TamilXP (@tamilxp) April 19, 2023