சசிகுமார் படத்தில் டிக் டாக் பேமஸ் ஜி.பி முத்து. என்ன கதாபாத்திரம் தெரியுமா?

டிக்டாக் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஜி.பி முத்து. டிக் டாக் தடை செய்யப்பட்டதால் YouTube பக்கத்திற்கு தாவினார். இதனையடுத்து மேலும் பிரபலமானார். இதனால் தற்போது இவருக்கு சினிமா கதவு திறந்துள்ளது.

Tamil Cinema News

இவர் தற்போது சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக யுவன் என்பவர் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்தில் டாக்டராக நடிக்கிறார் ஜி.பி முத்து.

கடந்த இரண்டு வருடங்களாக யூ டியூப் மூலம் பிரபலமாகும் சிலருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்நிலையில் ஜி.பி முத்துவிற்கும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisement

டிக் டாக் வீடியோக்களில் ஆபாசமாக பேசுவதாக இவர் மீது புகார்கள் ஒருபுறம் இருந்தாலும் தனது நெல்லை மாவட்டத்து பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.