மீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..!

இந்தியாவின் ராணுவ வீரர்கள் மீது, சைனாவின் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியாவை சேர்ந்த வீரர்கள் சிலர் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய அரசு டிக்-டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தனர். இந்த அறிவிப்பு, டிக்-டாக் பயணாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு இருக்க, வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிக்-டாக்கை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு இதை செய்தால் போதும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Advertisement

அதாவது, டிக்-டாக்கில் உங்களது மொழியை மாற்றி அமைத்தால், அதனை இங்கு பயன்படுத்தலாம் என்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்பம் அறிந்தவர்களிடம் கேட்டபோது, அந்த வீடியோவில் இருப்பது உண்மையில்லை. அது வெறும் கண்கட்டி வித்தை என்றும் தெரிவித்துள்ளனர்.