டிக்டாக் ரவுடி பேபி தற்கொலை முயற்சி – மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் செய்த சேட்டைகள் காரணமாக ரவுடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். பின்னர் இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டார்.

இவர் சிங்கப்பூர் சென்றிருந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால், அவர் அங்கேயே சிக்கிக்கொண்டார். பின்னர் வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை மிட்பதற்க்காக அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானங்கள் மூலம் தமிழகம் வந்த சூர்யா கடந்த 16ம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

இவரை கண்ட அக்கம் பக்கத்தினர் கொரோனா பீதியால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் இவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் தனக்கு கோவையில் பரிசோதனை செய்து, வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகுதான் தன்னை அனுப்பி வைத்தனர். என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Advertisement

மேலும் தான் ஏசி அறையிலேயே இருந்துவிட்டேன், தனக்கு மற்றவர்களிடம் இருந்து வைரஸ் பரவி விடுமோ என்று பயமாக உள்ளதாகவும், அரசு மருத்துவமனையில் தனி அறை, உணவு வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கொரோனா சோதனை செய்ய முடியாமல் போனது. மீண்டும் இரவு திருப்பூர் ரயில் நிலையம் அழைத்து சென்ற சுகாதார துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் இவரின் வீட்டின் முன்பு தனிமைபடுத்தப்பட்டவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது, அந்த செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக அந்த நிருபர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.