பெண்களின் அந்த உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்..!

முன்னுரை:-

பெண்களின் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம் பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விளக்கம்:-

பெண்கள் பொதுவாக, அந்த குறிப்பிட்ட உறுப்பை மட்டும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த உறுப்பு துணைக்கு அருவருப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அந்த இடத்தை சுத்தம் செய்ய பல்வேறு செயற்கை பொருட்கள் உள்ளன. ஆனால், அவை சிலரின் உடலுக்கு ஒத்துவராது. அவர்களைப்போன்றவர்கள், கீழ்க்காணும் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றவும்..

இயற்றை பொருட்கள்:-

1. எலுமிச்சை

2. ஆப்பிள் சீடர் வினிகர்

3. கற்றாழை

4. பேக்கிங் சோடா

எலுமிச்சை:-

எலுமிச்சை என்பது இயற்கையிலேயே மருத்துவ குணம் அதிகமாக உள்ள பொருள். அதனை பெண்கள் தங்களது அந்த உறுப்பில் ஏற்படும் துர்நாற்றத்தையும், அந்த இடத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வழிவகை செய்யும். அதாவது, எலுமி;ச்சையின் இலையை அந்த இடத்தில், மிருதுவாக பயன்படுத்தி வந்தால் துர்நாற்றம் ஏற்படாது.

ஆப்பிள் சீடர் வினிகர்:-

ஆப்பிள் சீடர் வினிகரை, ஒரு டப்பில் போட்டு விட்டு, அதில் கொஞ்சம் நீரை ஊற்றி விட்டு, அந்த தண்ணீரில் அமருங்கள். அதில், உள்ள அசிட்டிக், அந்த உறுப்பை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

கற்றாழை:-

கற்றாழை ஜெல்லை நீரில் கலந்து விட்டு, அந்த நீரைக்கொண்டும் உறுப்பை கழுவலாம். இதுவும் நல்ல பயனைத் தரும்.

பேக்கிங் சோடா:-

பேக்கிங் சோடாவை குளிக்கும் நீரில் கலந்து விடுங்கள். 20 நிமிடம் அந்த ஊறிய பிறகு, அந்த தண்ணீரில் அமரவும். இப்படி செய்தாலும், துர்நாற்றம் வராது.

Written by Vairamuthu Dasan

Leave a Reply

இன்றைய ராசி பலன் – 17-08-2020

60 வயதிலும் மாஸ் காட்ட வேண்டுமா..? இது உங்களுக்கான பதிவு..!