கோடைக்காலத்தில் ஜிம்முக்கு போறீங்களா?? ஒரு நிமிடம் இதைப் படிங்க

கோடைக்காலத்தில் ஜிம்முக்கு சொல்பவர்கள் வழக்கமாக குடித்து வரும் நீரை விட சற்று அதிகமாகவே கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வியர்வையின் வழியே உடலில் உள்ள நீர் சத்தின் அளவு குறைந்துவிடும். மேலும் உடல் வறட்சி அடைந்து விடும், ஆகையால் உடற்பயிற்சிக்கு முன் மற்றும் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு, அதிக அளவு நீரை குடியுங்கள்.

எலக்ட்ரோலைட்டுகள் அதிகப்படியான வியர்வையால் உடலில் அதன் அளவு குறையும். எனவே கோடை காலங்களில் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்தை உடலுக்கு அளிக்க வேண்டும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அடிக்கடி இளநீர் பருக வேண்டும்.

கோடை காலங்களில் உடற்பயிற்சி செய்ய சரியான நேரம் அதிகாலை தான். இதனால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட முடியும். காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீர்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடுவது இன்னும் நல்லது. கோடை காலங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி எடுக்காதீர்கள்.

Advertisement