திருப்பூரில் அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாய்

திருப்பூரில் அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு குழாய் பொருத்தி பேருந்தை இயக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்து சேவைகள் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகிறது. பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திருப்பூர் பணிமனைக்குட்பட்ட ஒரு சில பேருந்துகளில் கியர் ராடு பழுதடைந்துள்ளது. எனவே ஊழியர்கள் பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு குழாய் பொருத்தி இயக்கிவருகின்றனர்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பேருந்தை இப்படித்தான் இயக்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் திருப்பூர் -குமுளி வழித்தடத்தில் செல்லும் அரசுப்பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.