திருப்பூரில் ஏற்பட்ட திடீர் சத்தம் – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

திருப்பூரில் இன்று காலை10 மணியளவில் பலத்த சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இந்த சத்தம் பல்லடம், கொடுவாய், முருகம்பாளையம், கருவம்பாளையம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கேட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதனை சில பேர் நிலநடுக்கம் என வதந்தியை பரப்பி வந்தனர்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “இன்று காலை திருப்பூர் அருகே எழுந்த சப்தம் சூப்பர் சோனிக் தேஜஸ் விமானத்தில் ஏற்பட்ட சோனிக் பூம் சத்தம். இதனால் மக்கள் யாரும் தேவையின்றி அச்சம் கொள்ள வேண்டாம். வதந்தியை பரப்பவும் வேண்டாம்”. என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.