திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளில் விளக்கு ஏற்றி பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக பிரமாண்ட கொப்பரை நேற்று மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

தீபம் ஏற்றுவதற்காக 1500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மலை உச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

Advertisement

இந்தத் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் வெளியூர் பக்தர்கள் என 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.மலைமீது செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

கார்த்திகை தீபத் திருவிழா தமிழகம் முழுவதும் சிவன் விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.