தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு…! பிரதமர் மோடி இரங்கல்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (வயது 92) நேற்றிரவு காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த கே.என்.லட்சுமணன் இரு முறை தமிழக பாஜக தலைவராக இருந்தார். மேலும், 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர், சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்தார். இவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றார், ஆனால் வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பணியாற்றிய கே.என்.லட்சுமணன் மறைவு வருத்தமளிக்கிறது. நெருக்கடி நிலை சமயத்தில் அவரது பங்கும், சமூக கலாச்சார ரீதியில் அவரது பணியும் எப்போதும் நினைவு கூறப்படும் என்று கூறி உள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த தலைவரும், தமிழக முன்னாள் எம்எல்ஏவுமான கே.என்.லட்சுமணன் மறைவு செய்தியால் மன வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என கூறியுள்ளார்.