காவி நிற பலூனை பறக்கவிட தடை – அப்செட்டில் தமிழக பாஜக

பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழக பாஜக சார்பில் பலூன்களை பறக்க விடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்வில் கலந்து கொண்டு பலன்களை பறக்கவிட இருந்தனர்.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

Advertisement

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், தமிழகத்தில் கூலிப்படையினர் அதிகரித்து வருவதால் கோ பேக்மோடி என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

வணக்கம் மோடி வாங்க மோடி என்ற வாசகம் பொருந்திய பலூன்களை பறக்க விட இருந்தோம். சில பாதுகாப்பு காரணமாக பறக்க விட முடியவில்லை. மேலும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் உள்ள அறையை பூட்டி சாவி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.