மேஷம்
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் காணப்படும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் நல்ல பலனை தரும். பணிகளை சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். நிதி நிலைமை திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது. உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குழப்பமான சூழல் உருவாகும். பணவரவு குறைந்தே காணப்படும். அதே நேரத்தில் கூடுதல் செலவுகள் ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனக்குறைவு ஏற்படும். பணவரவு குறைந்து காணப்படும். செலவு அதிகமாக இருக்கும். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். உடற்பயிற்சி செய்வது நல்லது.
சிம்மம்
இன்று உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் நம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் மோதல் ஏற்பட லாம். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. உங்களுடைய உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
துலாம்
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வேலைகளை கவனமாக செய்து முடிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்க வேண்டாம். செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
தொழில் சார்ந்த அணுகுமுறை உங்களின் வளர்ச்சிக்கு உதவும். இன்று பணியை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். நிதி சம்பந்தமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை உண்டாக்கும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மகரம்
இன்று நன்மைகள் நடைபெறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பயனை தரும். உங்கள் பணிகளை திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நீங்கள் நிதிகளில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்
உங்கள் மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை அதிகம் காணப்படும். பணியில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தியானம் செய்யலாம்.
மீனம்
எதிர்மறை உணர்வுகள் ஏற்படலாம். பணியிடத்தில் கவனம் தேவை. பணவரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். உங்களின் செயல்களில் கவனம் தேவை.