இன்றைய ராசி பலன் 30-07-2020

மேஷம் 

இன்று நீங்கள் மந்தமான நிலையை உணர்வீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பணிச்சுமை அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. குடும்பத்தில் அமைதியான முறையில் நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ரிஷபம் 

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகக் காணப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம் 

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் நல்ல பலனை காண்பீர்கள். பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் 

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பணி சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம் 

இன்று நீங்கள் அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். வேலை செய்யும்போது கவனத்தோடு செய்ய வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கன்னி 

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியாக செல்லும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.

துலாம் 

இன்று நீங்கள் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம் 

இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனத்தோடு இருக்க வேண்டும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். குடும்ப உறவில் அமைதி இல்லாதது போல் உணர்வீர்கள். பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். மன உளைச்சல் ஏற்படலாம்.

தனுசு 

உங்கள் வளர்ச்சியில் சிறு தடைகள் உருவாகலாம். ஆன்மீக வழிபாடு நல்ல பலனை தரும். உங்கள் துணையுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மகரம் 

இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் காணப்படும். குடும்ப உறவில் மகிழ்ச்சி அளிக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கும்பம் 

உங்களுடைய விருப்பங்கள் நல்லமுறையில் நிறைவேறும். உங்கள் பணிகளை திருப்திகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல அணுகுமுறை ஏற்படும். பணம் வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம் 

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். குடும்ப பிரச்சனை காரணமாக மனக்குழப்பம் ஏற்படலாம். பண வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். தோள் வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம்.