இன்றைய ராசி பலன்கள் – 2-08-2020 (ஞாயிற்றுக்கிழமை)

மேஷம்

இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். பணி நிமித்தமாக பயணம் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ரிஷபம்

Advertisement

இன்று நீங்கள் மன உறுதியோடு இருப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படும். கண் எரிச்சல் உருவாக்கலாம்.

மிதுனம்

இன்று நீங்கள் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்கள் பணிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.

கடகம்

உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் உங்களுக்கு அதிகாரம் கிடைக்கவும். பண வரவு அதிகமாக காணப்படும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

கடின முயற்சிகள் செய்து உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனக்குறைவு காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். பணவரவு குறைவாகவே இருக்கும். அதிக பணி காரணமாக முதுகுவலி ஏற்படலாம்.

கன்னி

உங்கள் பணிகளை மேற்கொள்ள பொறுமையாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். முன்னேற்றம் குறைவாகவே இருக்கும். பணம் வரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

துலாம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக காணப்படும். பணியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு

உங்களுடைய வெற்றிக்கு வழிகாட்டும் நாளாக இன்று அமையும். பணியில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறவு பாதிக்காத வகையில் நடந்து கொள்வீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். அதிக பணிச்சுமை காரணமாக கவலை உண்டாகலாம். உங்களின் வீட்டிற்காக பணத்தைச் செலவழிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களிடம் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிக அளவில் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது. உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக செலவழிப்பீர்கள்.