மேஷம்
இன்றைய நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் கடின முயற்சிகள் வெற்றியை தரும். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
ரிஷபம்
நீங்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டும். பணிச்சுமை அதிகரித்து கொண்டே இருக்கும். குடும்பத்தாரிடம் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். செரிமான பிரச்சினைகள் உருவாகலாம்.
மிதுனம்
தியானம் செய்வதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சி குறைவாக காணப்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். தூரத்திலிருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
கன்னி
ஆன்மீகம் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். பணிச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாக காணப்படும். ஊக்கத்தொகை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
துலாம்
இன்று உங்களுடைய பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்களை காணலாம். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் குழப்பமான சூழலில் காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக காணப்படும். பணிகள் குறித்த நேரத்தில் செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். நிதி நிலைமை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு
புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். பணி நிமித்தமாக பயணங்கள் காணப்படும். உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் நாளாக அமையும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
மகரம்
உங்களுடைய பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுவீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். ஆன்மீக விஷயங்களுக்காக பணத்தைச் செலவழிப்பீர்கள். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம்
உங்கள் கவலைகளை மறக்க மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.