இன்றைய ராசி பலன் 31-07-2020

மேஷம்

இன்று நீங்கள் எதிர்காலத்தை பற்றி திட்டமிடுவீர்கள். பணிச்சுமைகள் அதிகம் இருப்பதால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் சிரமம் ஏற்படும்.தேவையற்ற செலவுகள் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும்.

ரிஷபம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மிதுனம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடும் மன உறுதியோடும் காணப்படுவீர்கள். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள். உங்கள் பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் மகிழ்ச்சி குறைந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் அமைதியற்ற சூழல் உருவாகலாம். தேவையற்ற செலவுகள் உருவாகும். மன உளைச்சல், தலைவலி ஏற்படலாம்.

சிம்மம்

இன்று நீங்கள் நிதானத்தோடு இருப்பது நல்லது. பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு உருவாகும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும். யோகா செய்வது நல்லது.

கன்னி

இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் நாளாக அமையும். உங்கள் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

துலாம்

உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். பணிகளில் சில சவால்களை சந்திக்க நேரும். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மன அமைதி கிடைக்க தியானம் மேற்கொள்ள வேண்டும். பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நன்மை, தீமை இரண்டும் சேர்ந்தே காணப்படும். பணிகளை கவனமாக செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் உருவாகலாம். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெறும். உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்

உங்களுடைய திட்டங்கள் நிறைவேறும் நாளாக இன்று அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் குடும்பத்தில் புரிந்துணர்வு ஏற்படும். பணவரவு கூடுதலாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் மன உறுதியோடு காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் சிறு தவறுகள் நடக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்க நீங்கள் அமைதி காக்க வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.