இன்றைய ராசி பலன்கள் 23-07-2020

மேஷம்

இன்று நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. சக ஊழியர்களால் தொந்தரவு ஏற்படும். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக பணத்தை செலவு செய்ய நேரிடும். உடல் ஆரோக்கியமாக இருக்க தியானத்தை மேற்கொள்ளவும்.

ரிஷபம்

நேரமின்மை காரணமாக பணியில் தாமதங்கள் ஏற்படலாம். வேலையை கவனமாக செய்ய வேண்டும். பணவரவு குறைவாகவே காணப்படும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு மிதமான வளர்ச்சி காணப்படும்.

மிதுனம்

உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். மன அமைதியுடன் காணப்படுவீர்கள். பணிகள் சுமுகமாக நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் பதட்டத்தோடு காணப்படுவீர்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது பணிச்சுமை அதிகமாக காணப்படும் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்காது மன பதட்டத்தால் தலைவலி உண்டாகலாம் தியானம் மற்றும் இறைவழிபாடு ஆறுதல் தரும்

சிம்மம்

இன்று உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும். மகிழ்ச்சி குறைவாகவே காணப்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணம் இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். சவால்களை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

கன்னி

இன்று உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிச்சுமைகள் அதிகமாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். பணவரவு சுமாராகவே இருக்கும். கால் அல்லது தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வது நல்லது.

துலாம்

இன்று நீங்கள் உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். குடும்ப உறவுகள், பணவரவு, ஆரோக்கியம் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக கையாள்வீர்கள். ஆன்மீக வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தனுசு

இன்று நீங்கள் மந்தமாகவே காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். கவனமாக பணியாற்றுவது நல்லது. பணவரவு குறைவாகவே காணப்படும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் குறைவாகவே காணப்படும். உங்கள் தந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மகரம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணியில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். குடும்ப உறவில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆரோக்கியம் மற்றும் பண வரவு சிறப்பாக இருக்காது.

கும்பம்

இன்று உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகஜமான அணுகுமுறை குடும்பத்திற்கு நல்லது.

மீனம்

இன்று நீங்கள் திட்டமிட்டு செய்யும் பணிகள் மூலம் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நல்ல விஷயங்களுக்காக பணத்தைச் செலவழிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.