மேஷம்
இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு சுமூகமாக அமையும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். பணவரவு குறைந்து காணப்படும்.
மிதுனம்
இன்றைய தினம் உங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்காது. உங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்றுங்கள். பணி காரணமாக பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.
கடகம்
நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் பணி சிறப்பாக நடக்கும். குடும்ப உறவில் நல்லிணக்கம் ஏற்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம். வேலை செய்யும் இடத்தில் பதட்டம் உண்டாகலாம். நிதி நிலைமையை சரியான முறையில் சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும்.
கன்னி
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மன அமைதி கிடைக்க தியானம் மேற்கொள்வது நல்லது. உங்கள் பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வேலை தொடர்பான பயணம் ஏற்படும். குடும்பத்தாரிடம் நல்ல அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
தனுசு
இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
மகரம்
இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணி செய்யுமிடத்தில் திட்டமிட்டு செய்வது நல்லது. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
கும்பம்
இன்று நீங்கள் அமைதியாக செயல்பட்டால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. உங்கள் துணையிடம் நல்ல வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதால் நல்லுறவு ஏற்படும். தேவைக்கு அதிகமான செலவுகள் ஏற்படலாம். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மீனம்
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். இன்று பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.