இன்றைய ராசி பலன் (செவ்வாய் கிழமை) 28-07-2020

மேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் பணிகளை நீங்கள் மகிழ்ச்சியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் மற்றும் நிதி நிலைமை சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

உங்கள் பணிகள் சிறப்பாக நடைபெறும். முக்கிய நடவடிக்கைகள் நல்ல பலனை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

ஆன்மீக வழிபாடு மூலம் நிம்மதி பெறுவீர்கள். பணிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமான மனநிலை ஏற்படும். பண வரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் பழகும்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.

சிம்மம்

இன்று உங்களுடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களுக்கு வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கன்னி

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. சக ஊழியர்களுடன் பொறுமை கடைபிடிக்கவேண்டும். நிதிநிலைமை சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். பணிகளை கவனமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

உங்களுடைய தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்ப உறவில் நல்லிணக்கம் ஏற்படும். பண வரவும் செலவும் சமமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகக் காணப்படும்.

தனுசு

உங்களுடைய வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படும். பணி நிமித்தமாக பயணம் ஏற்படும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். இன்று நீங்கள் பணம் முதலீடு செய்யலாம்.

கும்பம்

இன்றைய நாள் சிறப்பாக உற்சாகமாக இருக்கும். பணியிடத்தில் கவனத்தோடு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதங்கள் ஏற்படலாம். பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்

எதிர்மறை எண்ணங்களால் கவலையும் குழப்பமும் ஏற்படும். வேலையில் சிறுசிறு தவறுகள் நடக்கலாம். இதனை தவிர்க்க பணியில் கவனம் செலுத்துவது நல்லது. நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தொண்டை பிரச்சனைகள் உருவாகலாம்.