இன்றைய ராசி பலன்கள் – 03-08-2020 (திங்கள்கிழமை)

மேஷம்

இன்று அமைதியாக இருப்பது நல்லது. வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் பேசும்போது சண்டை வர வாய்ப்புண்டு. நிதானமாக இருப்பது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். பணத்தை சேமிப்பது நல்லது.

ரிஷபம்

Advertisement

இன்று மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நல்லிணக்கம் ஏற்படும். நிதி நிலைமை சாதகமாக இருக்கும்.

மிதுனம்

இன்று அமைதியான சூழ்நிலை காணப்படும். குறைவான முயற்சியில் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்திற்காக செலவு செய்ய வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நல்லது.

கடகம்

எந்த விஷயத்தையும் பொறுமையுடன் கையாள வேண்டும். உங்களது பணிகளை சிறப்பாக செய்ய சில திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களது துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும்.

சிம்மம்

இன்று ஆன்மிக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும். வேலை சூழ்நிலை நல்ல பலன்கள் தரும். துணையுடன் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இன்று பண வரவும் செலவும் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 

கன்னி

சுப நிகழ்ச்சிகள் இருந்தால் கவனமுடன் கையாளுவது நல்லது. பணியிடம் சிறப்பாக இருக்கும். துணையுடன் சண்டை வர வாய்ப்புண்டு. நிதானமாக இருப்பது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். நிதானமாக செலவு செய்வது நல்லது.

துலாம்

இன்று உங்களுக்கு சாதகமான நாள். வேலை இடம் சிறப்பாக இருக்கும். துணையுடன் அமைதியாக அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத பண வரவு வர வாய்ப்புண்டு. 

விருச்சிகம்

இன்று வருத்தம் மனசுக்குள் காணப்படலாம். நிதானமாகவும் நம்பிக்கையுடன் கையாள வேண்டும். பணியிடத்தில் மகிழ்ச்சி இருக்காது. துணையுடன் சண்டை நேரிட வாய்ப்புண்டு. பணத்தை இழக்க வாய்ப்புண்டு. நிதானமாக இருப்பது நல்லது

தனுசு

இன்று அமைதியாக இருப்பது நல்லது. உங்களது பணிகளில் சில இடர்கள் வரலாம். உங்களது துணையுடன் சுமூகமாக இருப்பது நல்லது. நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும். நிதானமாக செலவு செய்வது நல்லது.

மகரம்

இன்று உங்களுக்கான நாள். வேலையை சிறப்பாக முடிப்பீர்கள். மேலதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சி காணப்படும். சீரான நிதி நிலைமை காணப்படும். 

கும்பம்

இன்று நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணி சம்பந்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். பணத்தை நிதானமாக கையாள்வது நல்லது. 

மீனம்

தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். திட்டமிட்டு வேலை செய்தால் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை சேமிப்பது நல்லது