இன்றைய ராசி பலன்கள் (வெள்ளிக்கிழமை) – 07-08-2020

மேஷம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். உங்கள் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பணவரவு சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

இன்று நீங்கள் கடுமையான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். வேலை செய்யுமிடத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தாரிடம் சண்டை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணவரவு சுமாராக இருக்கும். முதுகுவலி ஏற்படலாம்.

கடகம்

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணிகளை குறித்த நேரத்தில் செய்ய முடியாத நிலை ஏற்படும். கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.

சிம்மம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடினமான பணிகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாரிடம் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாகக் காணப்படும்.

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணலாம். பணி நிமித்தமாக பயணம் ஏற்படும். பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். தூரத்தில் இருந்து வரவேண்டிய பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

உங்கள் செயல்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகம் இருப்பதால் பணிகளில் கவனக்குறைவு ஏற்படும். குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். பண வரவு திருப்திகரமாக இருக்காது. பதட்டம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம். தியானம் செய்வது நல்லது.

விருச்சிகம்

இன்று நீங்கள் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை காரணமாக உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் சிரமம் ஏற்படும். குடும்பத்தாரிடம் நல்ல முறையில் அணுக வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். தலைவலி, தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும்.

தனுசு

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் நாளாக அமையும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு நிம்மதியை அளிக்கும். குடும்பத்தாரிடம் நல்லுறவு ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் குழப்பமான சூழலில் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இறுக்கமான சூழல் ஏற்படலாம். பண வரவில் சிறு தடைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகமாகும். செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

கும்பம்

இன்று நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். தேவையற்ற செலவு காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு வெறுப்பு உணர்வு ஏற்படலாம். தியானம் செய்வது நல்லது. உங்கள் பணிகளை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். பணவரவில் திருப்தி இருக்காது. தேவையற்ற குழப்பத்தால் ஆரோக்கியம் சுமாராக காணப்படும்.