இன்றைய ராசி பலன் மே 15 – 2021

மேஷம்

இன்று பணியில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். பணியைப் பொறுத்தவரை அதிக முயற்சி எடுக்க வேண்டும். பலன்கள் தாமாதமாகக் கிடைக்கும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி பெறலாம். பணத்தட்டுப்பாடு காணப்படும். நிதிநிலைமை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குளிர்சியான உணவு வகைகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்

Advertisement

எதையும் உற்சாகமாக செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பதட்டம் காரணமாக கால்களில் வலி காணப்படும்.

மிதுனம்

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். மற்றவர்களுக்கு பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கடகம்

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமுடன் இருக்க வேண்டும். சுபகாரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி தரம் உயரும். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். உத்தியோகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள்

சிம்மம்

இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். குழந்தைகளால் மன நிம்மதி உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

உறவினர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நீடிக்கும்.

துலாம்

நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில் முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

விருச்சிகம்

கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

தனுசு

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் காணப்படும்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

மீனம்

பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.