இன்றைய ராசி பலன் (26-07-2021)

மேஷம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும் நாள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்.

ரிஷபம்

Advertisement

வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பழைய கடன்பாக்கிகள் வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத ஒப்பந்தம் கிடைக்கும்.

மிதுனம்

பணவரவு நன்றாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும்

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்

சிம்மம்

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்

துலாம்

வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். சில வேலைகளில் மறதியின் காரணமாக தடுமாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

எதிர்மறை எண்ணங்கள் விலகும். நட்புவட்டம் விரிவடையும் நாள். நட்பால் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் அமைதி நிலவும். நல்ல செய்தி இல்லம் தேடி வரும்.

தனுசு

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் இருமடங்காகும். தொலைதூரப் பயணங்கள் ஏற்படலாம். வாகன வசதி பெருகும்.

மகரம்

மனக்குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

கும்பம்

புது முதலீடுகளை தவிர்க்க வேண்டும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்துகள் மூலம் எதிர்பார்த்த லாபம் வந்து சேரலாம். அலைச்சல் ஏற்படலாம்.

மீனம்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.