இன்றைய ராசி பலன்கள் (சனிக்கிழமை) 25-07-2020

மேஷம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களின் கடின முயற்சி நல்ல பலனை தரும். பணியில் முன்னேற்றம் இருக்கும். பணவரவு கூடுதலாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பணிச்சுமை அதிகம் காணப்படலாம். தேவையற்ற செலவுகள் உருவாகலாம். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறு ஏற்படலாம். ஒருவிதமான வெறுப்பை உணர்வீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகம் காணப்படும். பணவரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்/ புதிய நபர்கள் மூலம் ஆதரவு பெறுவீர்கள்/ பணியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்/ குடும்ப உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகம் இருக்கும். அதனை திட்டமிட்டு செய்வது நல்லது. உங்களின் சோம்பல் தனத்தால் பணம் இழப்பு நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவேண்டும். பணிகள் சிறு தவறுகள் நடக்கலாம். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளவும். பெரிய அளவில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

துலாம்

இன்று நீங்கள் மந்தமாக காணப்படுவீர்கள். உங்கள் பணிகள் ஏமாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

விருச்சிகம்

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறவு, பணவரவு, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன உறுதியோடு காணப்படுவீர்கள். பணிகள் சிறப்பாக அமையும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். மன அமைதி கிடைக்க இசையை கேட்பது பிரார்த்தனை செய்வது நல்லது. வேலைகளில் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் வரவு குறைவாகவே காணப்படும். செலவுகள் அதிகம் காணப்படும். மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மை ஏற்படலாம்.

கும்பம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் தடைகள் ஏற்படும். பணிகளில் கவனம் தேவை. பண வரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியமும் குறைவாகவே இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.